திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில்திருமாளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மைத்துனரும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாய்மாமாவுமாகிய தெஷ்ணாமூர்த்தி வயது 102 வசித்து வருகிறார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு தனது வீட்டிலிருந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் வீட்டிற்கு வந்து அழைத்து வந்து தட்சிணாமூர்த்தி தனது வாக்கினை வாக்குசாவடியில் பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வரின் தாய்மாமா தெஷ்ணாமூர்த்தி… தனது 102 வயதிலும் தபால் வாக்கு செலுத்தாமல் வாக்குசாவடியில் தனது வாக்கினை செலுத்தி உள்ளேன் அனைவரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். அதனை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நன்னிலம் வேட்பாளர் முபாரக் கூறுகையில் இந்தியாவினுடைய ஜனநாயகத் தேர்தல் திருவிழா, தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 20 நாட்களாக மிகத் தீவிரமாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, மிகத் தீவிரமாக பிரச்சாரத்தை நடத்தி, இன்றைய தினம் தேர்தல் நாளாக, தமிழகம் முழுவதும் காலை 7:00 மணியிலிருந்து நமது வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக மிகச்சிறப்பான முறையிலே ஆர்வத்தோடு வாக்குச்சாவடியை நோக்கி இப்பொழுது வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழகத்தில் முதலவராக மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற திராவிட மாடல் நல்லாட்சி நாயகர், அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையிலே செயல்படுகிற மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒரு அமோக வெற்றியை பெறும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக நன்னிலம் சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தவரை, இன்றைய தினம் காலையில இருந்தே வாக்காளர்கள் மிக ஆர்வத்தோடு, அதிலும் குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்தோடு அவர்கள் வாக்களிக்க வந்திருப்பதை காணமுடிகிறது. உண்மையிலேயே இது தேர்தல் ஜனநாயகத்தின் மீது நமக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதோடு, நன்னிலம் சட்டமன்றத் தொகுதியிலே உதயசூரியன் சின்னத்திலே போட்டியிடுகிற என்னுடைய வாக்காளராக, நமது மரியாதைக்குரிய முத்தமிழறிஞர், முன்னாள் முதல்வர் அவர்களுடைய மைத்துனர், தமிழகத்தினுடைய முதல்வர், மரியாதைக்குரிய அண்ணன் தளபதி அவர்களுடைய அன்பு தாய்மாமா, மரியாதைக்குரிய மூத்த முன்னோடி, கழக மூத்த முன்னோடி ஐயா தட்சினாமூர்த்தி ஐயா அவர்கள், இன்றைக்கு தன்னுடைய 102 வயது என்கிற வயதையும் பாராமல் நான் என்னுடைய வாக்கை தபால் வாக்கின் மூலமாக நான் பதிவு செய்ய மாட்டேன். நேரடியாகக் களத்திற்கு வந்து வாக்குச்சாவடியில் தான் பதிவு செய்வேன் என்று சொல்லி, இன்றைக்குத் தன்னுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார். உண்மையிலேயே இந்த வாக்கை நிறைவேற்றி இருக்கிற பெரியவர், மூத்த முன்னோடி அவர்களைப் பார்க்கும் பொழுது உண்மையிலேயே பெருமிதமாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி இளம் வாக்காளர்கள் முதல் கொண்டு முதிய வாக்காளர்கள் வரை எல்லோரும் இந்த ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக வாக்குச்சாவடியை நோக்கி வருகிற காட்சி என்பது ஜனநாயகத்தினுடைய வெற்றியை இது காட்டுவதாக நான் கருதுகிறேன். நன்னிலம் சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தவரை, அமோக வாக்குகள் வித்தியாசத்தில நான் வெற்றி பெறுவேன் என்பதை வாக்காளர்களுடைய முகங்களைப் பார்க்கும் பொழுது உதயசூரியன் சின்னம் வெற்றி பெறும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது. அதேபோல தமிழ்நாட்டிலே வெல்வோம் 200, படைப்போம் வரலாறு என்கிற வரலாற்றை நமது மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மரியாதைக்குரிய அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய வழிகாட்டுதலில் நடைபெறுகிற இந்தக் கூட்டணி ஒரு அமோக வெற்றியைப் பெறும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என பேட்டியளித்தார் . Post navigation வடலூர் பள்ளிவாசலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு