whatsapp image 2026 07 14 at 2.14.40 pm(2)

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், திறந்தவெளி சுரங்கம் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து, மின் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது சுரங்கத்திலிருந்து, நிலக்கரி வெட்டி எடுத்து, புதிய அனல் மின் நிலையத்திற்கு, மந்தாரக்குப்பம் பகுதியில், சுமார் அரை கிலோ மீட்டர் தூரம், குடியிருப்பு பகுதி வழியாக லாரியின் மூலம் நிலக்கரி எடுத்து செல்வதால், அப்பகுதி உள்ள வீடுகள் முழுவதும் நிலக்கரி துகள்கள் மற்றும் புழுதி படிவதால், குடிநீர், உணவு மற்றும் வீடு முழுவதும் நிலக்கரி துகள்கள் புழுதி படிந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமடைந்தும், அடிக்கடி விபத்து நடைபெற்றும் வருகிறது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை என்எல்சி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். ஆனால் என்எல்சி நிர்வாகம், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, இன்று நிலக்கரி ஏற்றி வந்த, லாரியை, இரண்டாவது சுரங்க நுழைவாயில் முன்பு, மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *