images

பாமக வேட்பாளர் செளமியாவை ஆதரித்து, அக்கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரம்

திமுகவினர் ரூ.8,000 போலி கூப்பன் கொடுத்து வாக்கு கேட்டால், அந்த கூப்பனை நீங்களே வைத்துக் கொண்டு, 2,000 ரூபாய் ரொக்கமாக கையில் கொடுங்கள்; மீதி 6,000 ரூபாயை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுங்கள்… அவர்கள் ஓடி விடுவார்கள்.

தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும்; இந்த கொடுங்கோல் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்; கஞ்சா ஆட்சி, சாராய ஆட்சி, ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

தருமபுரி – மொரப்பூர் ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஆண்டுதோறும் கொடுக்கும் ரூ.100 கோடியில் ஒரு பைசாவை கூட திமுக அரசு பயன்படுத்தவில்லை; அதனால் அந்த திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தருமபுரியில் சிப்காட் கொண்டு வருவோம் என்று திமுக சொன்ன இடத்தில் வெறும் கற்கள் மட்டும்தான் இருக்கிறது. (கையில் கல்லை எடுத்து காண்பித்தார்.)

எடப்பாடி பழனிசாமி முதல்வரானால் தருமபுரி மாவட்டத்திற்கு சிப்காட் கொண்டுவரப்படும்; இளைஞர்களுக்கு சொந்த ஊரில் வேலை வய்ப்பு கிடைக்கும்.

முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல ஜி.கே.மணி அய்யாவின் வலது கரமில்லை; அவர் ஸ்டாலினோட வலது கரம்; தமிழ் குமரன் உதயநிதி ஸ்டாலினின் வலது கரம்.

_– தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் செளமியாவை ஆதரித்து, அன்புமணி பிரச்சாரம்செய்யும்போது இவ்வாறு
கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *