கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் ஆர்ச் கேட் எதிரே அமைந்துள்ள ஸ்ரீபிரம்மமுகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஆணி மாத அம்மாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதுமுன்னதாக பிரம்மமுகி தில்லை காளியம்மனுக்கு மிளகாய் யாகமும் சிறப்பான அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து பம்பை இசை முழங்க , அங்காளம்மன், சிகப்பு மாகாளி அம்மன் கருப்பசாமிஆகிய வேடமிட்டு ஆடல் பாடலுடன் காளி நடனம் நடைபெற்றது பின்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலானபெண்கள் பாரம்பரிய முறைப்படி தாலாட்டுப் பாடலுடன் கும்மி அடித்து வழிபட்டனர் தொடர்ந்து இரவு 12 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள 72 அடி உயர தில்லை காளி சிலைக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டதுநிகழ்வில் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். Post navigation ஜெயங்கொண்டம் குருக்கு ரோட்டில்,கொளூத்தும் வெய்யலுக்கு குளிர்ச்சியான நுங்கு வியாபாரம் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை ஆபாசமாக பேசிய திமுக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்துகரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வி பி மதியழகன் தலைமையில்தமிழக வெற்றிக் கழகம் கரூர் மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.இப்போராட்டத்தில் கரூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர் கழக, வார்டு,பகுதி,கிளை, அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.