img 20260715 wa0000

வடலூர், ஜூலை. 16: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அவுலியா நகரைச் சேர்ந்தவர் காதர் மொய்தீன் மகன் முகமது ஹனிப் (21) இவர் வடலூர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை சுமார் 11 மணியளவில், வடலூர் ரயில் நிலையத்திற்கும், குறிஞ்சிப்பாடி ரயில் நிலையத்திற்கும் இடையில் எல்.சி.,கேட் 34 அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்த சரக்கு ரயில் மோதி படுகாயமடைந்தார். பாதங்கள் இரண்டும் துண்டான நிலையில் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் ரயில்வே உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் உடலை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அவரது தாயார் தாஹிரா பேகம் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *