நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி முதலாவது சுரங்கத்தில் என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் முதாலவது சுரங்கத்தில் உள்ள மிடில் பெஞ்ச் பக்கெட் வீல் இயந்திரத்தில் திடிரென்று மின் கசிவு ஏற்பட்டது. பின்னர் இயந்திரத்தில் தீப்பிடித்து கன்வர் பில்டில் தீ பற்றி எரிய தொடங்கியது.இதுகுறித்து தகவல் அறிந்த என்எல்சி தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று பக்கெட் வீல் இயந்திரத்தில் எரிந்த தீயை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தின் போது என்எல்சி ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து என்எல்சி உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தீ எதனால் பற்றியது என்பது குறித்தும் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் விசாரணைக்கு பின்பு சேதமதிப்பு எவ்வளவு என்று தெரிய வரும் என என்எல்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்எல்சி முதலாவது சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. Post navigation வடலூரில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சாலை மறியல் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு