img 20260803 wa0180(1)

வடலூர், ஆக.4-
வடலூர் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் பலராமன் உத்தரவின் பேரில் வடலூர் சப்இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டிருந்தனர், அவர்கள் வடலூர் பஸ்நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு கிடமாக பையுடன் நின்ற ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை
செய்தனர். விசாரணையில் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, அம்மாவாசை மகன் ராஜசேகர் (34) என்பதும் இவர் வைத்திருந்த பையை சோதித்த போது பெங்களூரில் இருந்து 375 ஹான்ஸ் பாக்கெட் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. ( இதன்மதிப்பு குறைந்தபட்சமாக௹ 22 ஆயிரத்து 500 இருக்கலாம்) இதைத்தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து, கைது செய்து குறிஞ்சிப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed