கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வானதி ராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆர் கே சிட்டி பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிஇங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்கடந்த ஆட்சியில் இப்பகுதியில் உள்ள ஒரே ஒரு தெருவிற்கு மட்டும் பேவர் பிளாக் சாலை அமைத்து சாலை மற்றும் நிதி விவரங்கள் குறித்த கல்வெட்டை வைத்தது பலமுறை குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இன்றுவரை சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபொழுது ஊராட்சி நிர்வாகத்திடம் சாலை ஒப்படைக்கப்படாததால் சாலை அமைப்பதில் சிரமம் உள்ளதாக கூறப்பட்டுள்ளதுஆனால் இங்கு ஒரு தெருவிற்கு மட்டும் எப்படி சாலை அமைத்தீர்கள் என்ற கேள்வி எழும்பையில் அந்த கல்வெட்டு இரவோடு இரவாக அகற்றப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.மேலும் ஆர் கே சிட்டி முதல் கல்லுக்குழி வரை செல்லும் சாலையில் ஜல்லிக்கட்டு மற்றும் கிராவல் கலந்து தற்காலிக சாலை அமைக்கப்பட்டு கல்வெட்டு வைக்கப்பட்டது ஆனால் அந்தச் சாலையும் தற்பொழுது பெய்த மழையினால் மிகுந்த சேதம் அடைந்து வெறும் ஜல்லிக்கட்டு மட்டும் வெளியே தெரியும் அளவிற்கு உள்ளது குறிப்பிடத்தக்கதுசாலையை அமைக்காமல் சாலை அமைத்ததாக கல்வெட்டு மட்டும் வைக்கும் ஊராட்சி நிர்வாகம் விரைந்து சாலையை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். D.தனுஷ்குறிஞ்சிப்பாடி Post navigation வடலூர் அருகே ஆர் கே சிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக ஏரியாத மின்விளக்குகளால் பொதுமக்கள் அவதி