கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வானதிராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆர்.கே சிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக எரியாத மின்விளக்குகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்இங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக மின்விளக்கு அனைத்தும் மழையின் காரணமாக சேதம் அடைந்ததாகவும் சேதம் அடைந்த மின் விளக்கை சரி செய்யக்கோரி வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இன்று வரை சரி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை எழுந்துள்ளதுமின்விளக்கு எரியாத காரணத்தினால் பகுதிகள் அனைத்தும் இருள் சூழ்ந்து காணப்படுகிறதுஇதனால் அவ்வழியே பயணிக்கும் பெண்கள் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக அப்பகுதி குற்றம் சாட்டுகின்றனர்எனவே ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்குற்றச்சம்பவங்கள் நடைபெறும் முன் துரிதநடவடிக்கை மேற்கொள்ளுமா ஊராட்சி நிர்வாகம் என பொறுத்திருந்து பார்ப்போம். செய்தியாளர் D.தனுஷ் குறிஞ்சிப்பாடி Post navigation நெய்வேலி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நெய்வேலி தர்மன் காவல் நிலைய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ரோட்ட காணோம் வெறும் ஜல்லி மட்டும் தான் இருக்கு ஆட்டைய போட்ட ஊராட்சி நிர்வாகம்