வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது உலக தாய்ப்பால் வார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறதுஇதன் தொடர்ச்சியாகஉலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டுவடலூர் ரோட்டரி கிளப் மற்றும் கடலூர் மாவட்டம் இந்திய குழந்தை மருத்துவ சங்கம் சார்பாக வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 கர்பிணி தாய்மார்கள், மற்றும் சுகாதார நிலையத்தில் பிரசவம் அடைந்து குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு உலர் பழங்கள் ,மணிலா கேக் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டதுஇந்நிகழ்ச்சியில்வட்டார மருத்துவ அலுவலர் G.பாலச்சந்தர், மருத்துவர்கள் அ.செந்தில், ப.மகேஷ் ஆகியோர் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்நிகழ்ச்சியில் வடலூர் ரோட்டரி சங்க தலைவர் PHF.R.சரவணன், சாசன தலைவர் MPHF.V.புருஷோத்தமன், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் இவான்ஸ் பிரவீன், செயலாளர்,R.ஆறுமுகம், பொருளாளர்,A.ராஜன் பாபு, முன்னாள் தலைவர் P.மகாராஜன் ,உறுப்பினர்கள் மணிகண்டன், வினோதினி, சீனிவாசன், ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், உரக்கடை நாகராஜன், சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டணர்