கடலூர் மாவட்டம் வடலூரில் நேற்று இரவு 7.30 மணியளவில், குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தையும்,புவனகிரி தொகுதி வேட்பாளர் துரைகி சரவணன் ஆகியோர் களை ஆதரித்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்,ஒரு பேசும்போது கூறியதாவது இந்த தொகுதி வேட்பாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண்மைக்காக தனி பட்ஜெட் போட்டு வேளாண்மையை மேம்படுத்தியவர்,கடந்த முறை 17,000 வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்ற இந்த ஆண்டு இந்த முறை அவருக்கு 50 ஆயிரம் போட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் செய்வீர்களா? உதயசூரி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் இந்த தொகுதிக்காக பல திட்டங்களை செயல்படுத்தியவர் வடலூரில் பஸ் நிலையம் குறிஞ்சிப்பாடி புதிய பஸ் நிலையம் நகராட்சி கட்டிடங்கள்,புதிய வட்டாட்சியர் அலுவலகம்குள்ளஞ்சாவடி பத்திரபதிவு அலுவலகம் ஆரம்ப சுகாதார நிலையம் 479கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் வடலூரில் சர்வதேச மையம் வடலூரில் நீதிமன்ற கட்டிடம், கொண்டு வந்தவர்என எண்ணற்ற நலத்திட்ட பணிகளை செய்துள்ளார்,இதேபோன்று வெற்றி வேட்பாளர் புவனகிரி தொகுதி வேட்பாளர் துறைக்கு சரவணன் எனக்கு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் டெல்லி அணியா, தமிழக அணியா என்கிற நிலையில் தான் போட்டி நடைபெறுகிறதுடெல்லி அணியில் ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும், மீண்டும்ஆட்சிக்கு வந்தால் முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 35 லட்சம் இலவச லேப்டாப் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்என எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்துவோம், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல் திருமா அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களின் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் துரைகி சரவணன் ஆகியோர்க ளுக்கு உதயசூரியன் திட்டத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்தலைவர் அடிக்கடி சொல்வது போல் பல நலத் திட்டங்களை செய்திருக்கிறோம் செய்யப் போகிறோம் எடப்பாடி சொல்கிறார் எனக்கு அனுபவம் இல்லை என்று,அவர் போல காலில் விழுந்து பதவி பெற்ற அனுப்பவம் எனகில்லை,மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் தொகை கூட்டி வழங்கப்படும் வீட்டு உபயோக பொருள்கள்வாங்க எட்டாயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும்,உங்கள் வீட்டுப் பிள்ளையை கேட்கிறேன் தலைவரின் மகனாக கேட்கிறேன், கலைஞரின் பேரனாக கேட்கிறேன், உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்,இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்,கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் நகர மன்ற துணைத் தலைவர் சுப்ராயலு உட்பட பலர் கலந்து கொண்டனர் Post navigation ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு… அரியலூர் …