ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா ராஜேந்திரனை உற்சாகமாக வரவேற்ற கிராம மக்கள்…விசில் சின்னத்திற்கு கிராமங்கள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வரும் தொண்டர்கள்… தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது.வேட்பாளர்கள் கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக கவிதா ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இவர் இன்று உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் கவிதா ராஜேந்திரனை, கிராமத்து பெண்கள் உற்சாகமாக வரவேற்றனர். ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும், சால்வை அணிவித்து அணிவித்தும் ஒவ்வொரு கிராமத்திலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராம மக்களிடம் தான் போட்டியிடும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கவிதா ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார். தான் வெற்றி பெற்றால், கிராமத்திற்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளையும், அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகையாக 2500 ரூபாயும், தரமான சாலை, மின்சார வசதி, சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன் என்று உறுதி அளித்தார். தமிழக வெற்றிக்கழக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வேட்பாளர் கவிதா ராஜேந்திரனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். D VELMURUGANARIYALUR DISTRICT REPORTER Post navigation திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும்வடலூர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு கள்ளக்குறிச்சி ஊர் காவல் படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு