வடலூர், மே. 8 –வடலூர் அருகே ரோடு மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மனைவி சரஸ்வதி 64; இவர் இன்று காலை வயல்வெளியில் களை எடுக்கும் வேலைக்கு சென்றார்.அப்போதுஅதிக காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்துள்ளது. திடீரென்று அப்பகுதியில்இடி விழுந்தில் சரஸ்வதி மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Post navigation கவலையா இருக்கு! இந்தியாவை திமுக 2-ஆ பிரிக்க பார்க்குது! அமித் ஷா குரலில் மாற்றம்! லோக்சபாவில் சுளீர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை