“மொத்த துரோக கூட்டமும் ஒன்று சேர்ந்துள்ளது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவின் காலில் விழுந்துகிடந்து பின்னர் அவருக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் எனக் கூறி சசிகலாவிற்கு துரோகம் செய்த டி.டி.வி. தினகரன், அதிமுக அமைச்சர்களை டயர் நக்கி எனக் கூறி தனது தந்தை ராமதாஸுக்கு துரோக்கம் செய்துள்ள அன்புமணி ஆகிய துரோகங்களின் மொத்தக் கூட்டம் கூட்டணி சேர்ந்து ஒன்றுசேர்ந்துள்ளது. இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று போட்டியிடவில்லை. அதிமுகவை யார் கைப்பற்றுவது என எடப்பாடி, டி.டி.வியும், ராமதாஸிடமிருந்து பாமகவை கைப்பற்றுவதற்காக அன்புமணியும் தேர்தல் களத்தில் உள்ளனர்.” Post navigation நூறு சதவீதம் வாக்களிக்கவாக்காளர் உறுதிமொழி