ஈரான் மீதான போரை முழுமையாக நிறுத்த, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பகேர் கலிபாஃப் ஆகியோர் தலைமையிலான இருநாடுகளின் குழுக்களும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை. 14 மணிநேரத்துக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தை நள்ளிரவு நிறைவு பெற்றது. மேலும், இரு நாடுகளும் எழுத்துப்பூர்வ ஆவணங்களை பரிமாறிக் கொண்டன. உடன்பாடு எட்டப்படாத சில விஷயங்கள் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு தகவல். ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் கருத்து வேறுபாடு நீடிப்பதாக தகவல். “பேச்சுவார்த்தை தோல்வி “ இரண்டு வார இடைக்கால போர்நிறுத்தத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் நேரடி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அறிவித்தார். நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எட்டப்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார். ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை கைவிட மறுத்ததால், அமெரிக்கா முன்வைத்த இறுதி முன்மொழிவை நிராகரித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் ஒரு மேசையைத் தயார் செய்தோம், ஆனால் ஈரான் அதில் அமரத் தயாராக இல்லை” என வான்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஈரானிய உயரதிகாரிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கிரீன் கார்டுகளை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை உறுதி செய்துள்ளது. Post navigation 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்திருப்போரூர் தொகுதியில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள். திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு,