தஞ்சையில் தேர்தல் பரப்புரையில்முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமியின் ஓனர் மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இப்படிக்கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என நினைக்கும்படி கடிதம் இருந்தது.தமிழக அரசு தரும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி அதிகமாகிறது, அதனால் பிரச்னை. எனவே, நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கடிதம். மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என வலியுறுத்தி கடிதம் வந்திருக்கிறது. தமிழர் என்ற உணர்வு இருந்தால், பழனிசாமி வாய் திறந்து பாஜகவை கண்டிப்பாரா?; விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது? பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் போலி விவசாயி பழனிசாமி. – தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு Post navigation கம்பம் நகரப் பகுதி பள்ளிவாசலில்தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கா.சொ.க. கண்ணன் விரட்டியடிப்பு.