கடலூர், மாவட்டத்தில்தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஜ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,அவர்களுடன் நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்விற்கு பின் மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில்இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற 23.04.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளான, 151-திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 155 இடங்களில் 279 வாக்குச்சாவடி மையங்களும், 152- விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்கு 163 இடங்களில் 317 வாக்குச்சாவடி மையங்களும், 153-நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு 121 இடங்களில் 256 வாக்குச்சாவடி மையங்களும், 154-பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு 135 இடங்களில் 309 வாக்குச்சாவடி மையங்களும், 155- கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு 107 இடங்களில் 258 வாக்குச்சாவடி மையங்களும். 156-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு 163 இடங்களில் 278 வாக்குச்சாவடி மையங்களும், 157-புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு 166 இடங்களில் 304 வாக்குச்சாடி மையங்களும், 158- சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு 154 இடங்களில் 298 வாக்குச்சாவடி மையங்களும், 159-காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு 163 இடங்களில் 291 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு 1,327 இடங்களில் 2,590 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட உள்ளது . தேர்தல் பணிகளில் 2,432 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நிலைய அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.சட்டமன்ற பொதுத் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், நேர்மையாக நடத்திடவும் வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றியும், அச்சுறுத்தல் இன்றியும் வாக்களித்திட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் இன்று 153-நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, கீழே வடகுத்து அருள்ஜோதி நடுநிலைப்பள்ளி, கீழூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பச்சாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்கு சாவடி மையங்கள் ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து 156- குறிஞ்சிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடலூர்,பார்வதிபுரம் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, கல்குணம் அரசு உயர்நிலைப்பள்ளி, தம்பிபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆகியவாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியான சுதந்திரமாகவும் நடைபெறுவதனை உறுதி செய்திட துறை அலுவலர்களுக்கு அறிவித்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். Post navigation 2ம் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியீடு மகளிருக்கு ரூ2000 தொகை, நீட், விலக்கு: பாமக தேர்தல் வாக்குறுதி