whatsapp image 2026 03 30 at 11.20.54 pmவாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு முகாம்

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார்குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சிநடந்தது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற ஏப்ரல் 23ஆம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது.இதில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சிவகுப்பு வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல்நடத்தும் அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.அதில் 278 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1049 வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளனர்.மேலும் வாக்குச்சாவடிஅலுவலர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள் ஆகியோருக்கு வாக்குச்சாவடியை தயார் செய்தல், வாக்குச்சாவடியில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள், ஆவணங்கள் பராமரிப்பு, வாக்குப்பெட்டி பாதுகாப்பு, வாக்குச்சாவடி முகவர்களுக்கான உரிமைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.அப்போது மாவட்டவருவாய் அலுவலர் புண்ணியகோட்டி கலந்துகொண்டு பார்வையிட்டுஆய்வுசெய்தார்.
இதில் தேர்தல்துணை அலுவலர்கள் விஜய்ஆனந்த்,
ஆனந்தி,தேர்தல் துணை வட்டாட்சியர் தனலட்சுமி, துணைவட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமஉதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *