whatsapp image 2026 03 29 at 9.00.29 pm

வடலூர், மார்ச்.29 –
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் உள்ள வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நகர, கிராமத்தில் வீடு வீடாக சென்று தேர்தல் திருவிழா பத்திரிக்கை வழங்கல், தெருக்கூத்து கலை நிகழ்ச்சி, கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் பேரணி, நடமாடும் வாகனம் எல்ஈடி (LED) திரையுடன் தேர்தல் குறித்து குறும்படம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி வடலூர் நகராட்சி சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையாளர் ஹேமலதா,
பொறியாளர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி அலுவலக வளாகத்தில் ரங்கோலி கோலம் வரைந்து வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மேலும் பேருந்து நிலையம், கடை வீதியில் உள்ள வியாபாரிகள், மற்றும் முக்கியவீதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பேருந்து நிலையம் அருகில் பலகை அமைத்தும், அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என கையொப்பமிட்டு உறுதிமொழி எடுத்தனர். இதில் தேர்தல் துணை அலுவலர் ஆனந்தி, நகராட்சி மேலாளர் துரை , கணக்காளர் லூர்து மேரி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார்,
வருவாய் ஆய்வாளர் பொன்னி, உதவியாளர் குளோரி, இளநிலை உதவியாளர் கணேசமூர்த்தி, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *