மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அளித்துள்ள பேட்டி:- “அப்பா களத்தில் இருந்தால் அந்த வேகமே வேற… தேர்தல் நேரத்திலாவது அப்பாவை அவங்க பயன்படுத்தி யிருக்கலாம். தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை சித்தப்பா ‘சூப்பர்ஸ்டார்’னு சொல்றார். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகளைச் சொல்லாமல், ‘எட்டாயிரத்துக்கு கூப்பன் கொடுப்போம்’கிற மலினமான வாக்குறுதி எப்படி சூப்பர்ஸ்டாராகும்.. ‘நீட்டை ஒழிப்போம்’னு சொன்ன வாக்குறுதி என்னாச்சு உதயநிதி போன தேர்தலில் செங்கல்லைத் தூக்கிட்டு திரிஞ்ச மாதிரி இந்தத் தேர்தலில் எடப்பாடியாரோட போட்டோவைத் தூக்கிட்டு திரியிறார். என்னதான் இருந்தாலும் எடப்பாடியார் முன்னாள் முதல்வர். அவரைப்போய் தவழ்ந்தவர், காலில் விழுந்தவர்னு உதயநிதி பரிகாசம் பண்றது தப்பில்லையா?” “எடப்பாடி பழனிசாமியும் அவதூறான வார்த்தைகளைத்தானே பயன்படுத்துகிறார்?” “அவரை அப்படிப் பேசத் தூண்டியது யார்… சசிகலா அம்மையாரின் காலில் விழுந்து வணங்கியதைத் தவறாகச் சித்திரிப்பதன் மூலமா நீங்க என்னத்தை நிறுவப்பார்க்குறீங்க… இதுதான் பெண்களுக்கு நீங்க குடுக்குற மரியாதையா.. நிர்வாகம், செயல்பாடு, திட்டங்கள், வாக்குறுதிகளைப் பற்றிப் பேசாமல் தனிநபர் தாக்குதலை முதலில் யார் ஆரம்பிச்சது… உதயநிதியின் பக்குவம் இல்லாத பேச்சை சித்தப்பாவும் என்கரேஜ் பண்ணிட்டார். போதாக்குறைக்கு கனிமொழி அத்தையும் மலர் வளையம் வெப்போம்கிற மாதிரி பேசிட்டாங்க. தாத்தா கலைஞர் மட்டும் இப்போ இருந்திருந்தால் நிச்சயமா இந்த மூணு பேரையும் கண்டிச்சிருப்பார். நான் ஒரு வார இதழுக்குக் கொடுத்த பேட்டியில் ‘மருத்துவர் ராமதாசு’ன்னு சொல்லிட்டேன். அதுக்காக, ‘மூத்த தலைவரை நீ எப்படி பெயர் சொல்லிப் பேசினே?’ன்னு திட்டி, வெச்சார் தாத்தா. அவரோட வழியில் வந்துட்டு இவ்வளவு தரம் தாழ்ந்த விமர்சனங்களை எங்க குடும்பத்து ஆட்கள் பேசியிருக்கக் கூடாது.” நன்றி: ஜூனியர் விகடன் ‘ – மு.க.அழகிரி மகள் கயல்விழி பரபரப்பு பேட்டி Post navigation வசந்தம் கார்த்திகேயன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு