கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொளல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்இந்நிலையில் புரசை உதவும் கைகள் சார்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு மளிகை பொருட்கள் மற்றும் உதவி உபகரணங்களானவாக் ஸ்டிக் ,ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் புரசை உதவும் கைகள் நிறுவனர் வெங்கடேசன் , கோவிந்தராஜ், ஆடலரசன் மற்றும் ஸ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனர் சாய் பிரசாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினர்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சி இறுதியில் நன்றி தெரிவித்தனர்.நிகழ்வில் சிவக்குமார் டி எம் டி நல சங்க ஒருங்கிணைப்பாளர் அருண், ஜோதி கமலி லதா அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் D.தனுஷ்குறிஞ்சிப்பாடி Post navigation பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை