தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. கிராமங்களுக்கு சென்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக க.சொ.க. கண்ணன் போட்டியிடுகிறார். இவர் இன்று விளந்தை, பெரியதத்தூர், திருக்களப்பூர், பெரிய கிருஷ்ணாபுரம், சூரப்பள்ளம், நாகம்பந்தல், பெரிய கருக்கை உள்ளிட்ட 27 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தங்களது கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் கண்ணனை, கிராமத்து பெண்கள் உற்சாகமாக வரவேற்றனர். ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் ஒவ்வொரு கிராமத்திலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராம மக்களிடம் தான் போட்டியிடும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதிகளாக மகளிருக்கு 8000 ரூபாய் கூப்பன் மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குதல், ஐந்தாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்குதல், உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையாக வழங்கி உள்ளது. மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமத்திற்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளையும், தரமான சாலை, மின்சார வசதி, சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்கனவேசெய்து தந்துள்ளேன்.மீண்டும் என்னை தேர்ந்தெடுத்தால் உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன் என்று உறுதி அளித்தார். பிரச்சாரத்தில் உடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வேட்பாளர் கண்ணனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். D VELMURUGANARIYALUR DISTRICT REPORTER Post navigation மயான பூமியில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்!