பிறப்பு இறப்பு இடையே மனிதனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அந்த வாழ்க்கையில் பல சுகமும் துக்கமும் சாதனையும் வேதனையும் அடங்கி உள்ளது. அந்த வாழ்க்கையில் உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் என பலர் சூழ இருப்பார்கள். விசேஷ வைபவங்கள் என்றாலும் துக்க நிகழ்வு என்றாலும் உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் என அனைவரும் அனைத்து நிகழ்விலும் பங்கேற்பர். ஆனால் ஒருவரது வாழ்க்கையில் உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் உட்பட அனைவராலும் கைவிடப்பட்டு ஆதரவற்று அனாதையாக வாழும் வாழ்க்கை மிகவும் வலி மிக்கது. வேதனை மிக்கது. அப்படி ஆதரவற்று இறந்து விட்டால் சாதி மத இன வேறுபாடு இன்றி அவர்களுக்கு ஆதரவாய் இருந்து நல்லடக்கம் செய்து வருகிறார் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார். அது மட்டுமின்றி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம் பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகத்தையும் நடத்தி வருகிறார். இது குறித்து திருச்சிஅமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,திருச்சியில் மயான பூமியில் மனைவி மகள் ஆதரவுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறேன்.மரணமானது துயரத்தின் உச்சம் ஆகும். இறந்தவரின் உடலை அவரின் சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களுக்கோஊருக்கோ உறவினர்க்கோதகவல் கொடுக்க முடியாமல் பெயர் விலாசம் தெரியாத உரிமை கோரப்படாத உடல்கள் ஏராளம். இப்படி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம். மரணம் ஒன்று தான். சம்பவங்கள் பல. இதன் வலியும் வேதனையும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. சாலை, ரயில் விபத்தில் பலியாகி உடல் மூட்டையாய் வந்ததும் உண்டு. ஆற்று மதகில் ஊறிய நிலையில் கிடந்த உடலும் உண்டு. மாவட்டத்தில்ஒவ்வொரு பகுதியிலும் பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்டு ஜுவனம் நடத்தி வருகிறார்கள். பிச்சைக்காரர்கள், பார்வை குறைபாடு, ஊனமுற்றோர், தொழுநோயாளிகள்,மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வாழ்வாதாரம் இழந்து தவிப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,பலர் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், போக்குவரத்து சிக்னல், சுற்றுலா தலங்கள், கோயில்கள் மற்றும் வழக்கமான கூட்டம் அதிகமாக இருக்கும் பல பகுதிகளில் பலர் பல நிலைகளில் பிச்சை எடுப்பவர்கள் கிழிந்த மற்றும் அழுக்குத் துணியுடன் ஊனமுற்றவர்களாகவோ, வேலை செய்ய இயலாமையினாலோ, வயதானவர்களாகவோ அல்லது பார்வையற்றவர்களாகவோ அல்லது அடிப்படைத் தேவைகளுக்கு உண்மையில் பணம் தேவைப்படுவதாலோ பிச்சை எடுக்கிறார்கள். இவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்து, தங்கள் வாழ்வாதாரத்திற்காக பிச்சை எடுக்கின்றனர்..ஆனால் பிச்சை எடுப்பதை சிலர் தொழிலாக தொடர்வது வருத்தமளிக்கிறது. வீடற்ற நிலையில் பணம் அல்லது உணவு போன்றவற்றை பிறரிடம் இருந்து கேட்டுப் பெறும் நபர்கள், பல சமூக சிக்கல்களுடன் போராடுகிறார்கள்.இவ்வாறு யாசகம் கேட்பவர்கள் வறுமை, மனநலப் பிரச்சினைகள், உடல் நலக்குறைவு, முதுமை போன்ற பல்வேறு காரணங்களில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு வீடற்றவர்களாகவும், பிச்சைகாரர்களாகவும் உள்ளனர்.பொருளாதாரக் காரணம் மற்றும் குறைந்த ஊதியம் காரணமாக பலர் வீடற்றவர்களாக மாறுகிறார்கள்.மனநலப் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் அடிமை போன்றவையும் வீடற்ற நிலைக்கு ஒரு காரணமாக உள்ளது.வீடற்ற பிச்சைகாரர்கள் பல சமூக புறக்கணிப்புகளை எதிர்கொள்கிறார்கள். வீடற்ற பிச்சைகாரர்கள் வேலை செய்ய மறுக்கிறார்கள்,பிச்சை எடுத்து ஜீவனம் நடத்திய இருபாலரும் பேருந்து நிறுத்தத்திலோ, சாலை ஓரத்திலோ இறந்தவர்களும் உண்டு. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு சென்றவர்களும் உண்டு. புராண, இதிகாச காலம்தொட்டு மயானங்களில் இந்து மதத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் சுடுகாட்டில் அல்லது உடலை புதைக்கும் இடுகாட்டில் ஆண்கள் தான் இறுதி காரியங்களை செய்து வருவார்கள். பெண்கள் வீட்டில் காரியங்களை செய்வதோடு சரி. சுடுகாட்டில், மயானத்தில் காரியங்கள் செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவர் அல்லது பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்களின் உடலுக்குக்கூட அந்த இடத்தில் இறுதியாக முகத்தை கூட பார்க்க அனுமதிக்கப்படாத இந்த உலகில் மயான பூமியில் மனைவி வழக்கறிஞர் சித்ரா மகள் கீர்த்தனா உள்ளிட்டோருடன் இணைந்து ஆதரவற்ற அனாதை பிரேதங்களை அடக்கம் செய்து வருகிறேன். உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் வறுமை மாறாமல் தொடா்கிறது.கொடிது கொடிது வறுமை கொடிதுவறுமையின் விளைவை களப் பணியால் அறிந்து அதற்குண்டான அணுகு முறை கொள்கையுடன் தினசரி உணவகங்களில் உபரியாகும் உணவினை பெற்று வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் ஆண்டு தோறும் உணவளித்து வருகிறோம்.வறுமையை உணா்வுப்பூா்வமாக கள ஆய்வில் கண்டுள்ளோம். ‘ஏழ்மையான பொருளாதாரத்தாலோமுதுமை மற்றும் நோயின் அடிப்படையில்காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு சாலையோரங்களிலேயே உண்டு உறங்கி கையேந்தி பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி மருத்துவ சிகிச்சை இன்றி உடல் நலம் குன்றி குற்றுயிராக உருக்குலைந்து அழுக்கு படிந்த உடல், ஏக்கம் நிறைந்த கண்கள், கறை படிந்த பற்கள், கிழிந்த உடையுடன் சாலை ஓரங்களிலேயே இறந்து போய் விடுகிறார்கள். இவர்கள் போதிய பண வசதி இல்லாமல் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருவது எங்களது ஆய்வில் தெரிகிறது.உற்றார் உறவினர் சகோதர சகோதரிகள் உதாசீனத்தால் உறவின்றி பொது மக்களிடம் கையேந்தி வாழ்க்கையினை நடத்துகின்றனர். பல ஏளனத்திற்கு ஆளானவர்கள் படும் கோபம், வேதனை, துக்கம், துயரத்தால் இவர்கள் நிம்மதியாக தூங்கவோ, வேலை செய்யவோ அல்லது சாப்பிடவோ முடிவதில்லை. இவர்களது வேதனைக்கு முக்கியக் காரணியாய் அமைவது உடல்நலக் குறைவும் முதுமையும் தான். மிகவும் ஏழ்மையான வா்க்கத்தைச் சோ்ந்தவர்கள் சாப்பிடுவதை குறைத்தும், ஒரு வேளை சாப்பிடுவதை முற்றிலும் தவிா்த்தும் உள்ளனா் . இதனால் இவா்களின் மகிழ்ச்சியும் காற்றோடு கலந்து விடுகிறது.ஏன் அடிப்படை உரிமைகளான வீட்டை இழந்து குடும்பத்தை மறந்து தங்களின் சமூகப் பிணைப்பில் இருந்து விலகி ஒரு நிலையற்ற வாழ்வை வாழ்கின்றனா்.இப்படி வறுமையில் வாழும் அவா்களின் துன்பங்களும் துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். எப்படி இருப்பினும் இன்னும் வறுமை தீா்ந்தபாடில்லை தொடர்கிறது.ஆதரவற்ற அனாதை பிரேத நல்லடக்க பணியினை மனைவி மகளுடன் இணைந்து செய்யும் போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன். இவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை மலர்மாலை அணிவிக்க யாருமில்லை இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை. பிரேதத்திற்கு வாய்க்கு அரிசி போட ஆளில்லை.இறந்த நபருக்கு ஒரு மகன் இருந்தால் ஒரு மகள் இருந்தால் ஒரு பேத்தி இருந்தால் என்ன செய்வார்களோ அந்த காரியத்தை நாங்கள் செய்கிறோம். கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது பல உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம்.மனைவி வழக்கறிஞர் சித்ரா மகள் கீர்த்தனா நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.இதனால் வரை 26 முறை குருதிக்கொடைஅளித்துள்ளேன். தன் வாழ்நாளிற்குப் பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரிக்கு உடலை தானமாக வழங்க பதிவு செய்து உள்ளேன் என்றார்.உரிமைக்கோரரப்படாத உடலினை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் மனிதாபிமான செயலைப் பாராட்டி2023 ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழும் 2026 ஆண்டு தமிழ்நாடு ஆளுநர் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. Post navigation ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் இசக்கிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.