img 20260406 wa0007

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தமிழக முழுவதும் நேற்று வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.அதன்படி குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நிறைவு பெற்றது. இதற்கு முன்னதாக
அ.தி.மு.க.வேட்பாளர் புவனேந்திரன் என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் பிரதான சாலைக்கு காரில் வந்தனர்.
அப்போது அவருடன் 10க்கும் மேற்பட்டோர் 5 கார்களில் வந்ததை கண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் எங்களை மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய குறைந்த எண்ணிக்கையில் அனுப்பி விட்டு அ.தி.மு.க., வினரை மட்டுமே அதிகளவில் உள்ளே ஏன் அனுமதித்தீர்கள் எனக் கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து நெய்வேலி டி எஸ்பி இராதாகிருஷ்ணன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *