கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பங்குனி உத்திர விழாவினை முன்னிட்டு வேலுடையான்பட்டுஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருகோயிலில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் நெய்வேலியில் உள்ள வட்டம் 18 காவடி செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகள் மற்றும் பால் குடங்களை எடுத்து கொண்டு முருக பக்தர்கள் அண்ணாசாலை வழியா புறப்பட்டு வேலுடையான்பட்டு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருகோயில் வந்தடைந்தனர். பின்னர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது இதனை கண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த பங்குனி உத்திர விழாவில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது. Post navigation மந்தாரக்குப்பத்தில் பங்குனி உத்திர காவடி உற்சவம், ஆயிரம் பேருக்குஅன்னதானம்