பாரத பிரதமர் நரேந்திர மோடியை தாக்க திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டில் பீகார் மாநிலத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்புகளில் கவனம் ஈர்த்துள்ளது.புக்சார் மாவட்டத்தில் சிம்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரதமர் தொடர்பான தகவல்களை சேகரித்து, தாக்குதல் நடத்த சதி செய்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டின் தன்மை குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். Post navigation முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன்திமுகவில் இணைந்தார். ஒரே ஒரு பேச்சுதான்.. மொத்த வடஇந்தியாவையும் தமிழ்நாடு பக்கம் திருப்பிய ஆ.ராசா..