கடலூர், மாவட்டம்வடலூர் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் முருகையன் என்ற விவசாயின் நிலத்தில், தமிழக மின் துறையின் மின்சார டிரான்ஸ்பார்மர் இருந்தது, இந்த ட்ரான்ஸ்பார்மர் அமைப்பின் உள்ளே இருந்த குறைந்த மற்றும், உயர் மின்னழுத்த (செம்பு)கம்பிகளை நேற்று முன்தினம் யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ., 60 ஆயிரத்துக்கு மேல் இருக்கலாம் . இந்த திருட்டு குறித்து வடலூர் உதவி மின் பொறியாளர் சல்மா, வடலூர் போலீசில் புகார் செய்தார். இதனையொட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகிறார்கள். இதே போல சில நாட்களுக்கு முன்பு கருங்குழி மற்றும், பார்வதிபுரம் ஆகிய இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பிகளை, தொடர்ந்து,மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகிறது., வடலூர் போலீசார்தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர் Post navigation தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க 20ம்தேதி முதல் விண்ணப்பம்.