மு.க.ஸ்டாலின்: நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா? தமிழ்நாடு பலர் கண்ணை உறுத்துகிறது; தைரியமிருந்தால் தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா? அப்பாவு, சபாநாயகர்:எனக்கு ஓட்டு போட்டா போடுங்க; இல்லைனா போடாதீங்க; அது உங்க விருப்பம்; ஆனா என்னை ஒட்டு கேட்க கூடாதுனு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலினுக்கு மறதி அதிகம்; அதனால்தான் இது டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தல் என்கிறார். ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் நிர்வாகம் பற்றி பேசுவார்; அதற்கு நானும் பதிலளிப்பேன். அன்புமணி: நாடாளுமன்ற தேர்தலில்தான் திமுகவிற்கும் பாஜகவிற்கும் போட்டி; ஆனால் இது சட்டமன்றத் தேர்தல்; இதில் திமுகவுக்கும் அதிமுக கூட்டணிக்கும்தான் போட்டி. ஆனால், ஸ்டாலின் வேண்டுமென்றே எப்போது பார்த்தாலும் பிஜேபி பிஜேபி என்று விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை: தேர்தல் களம் இருமுனைப் போட்டியாக மாறிக்கொண்டிருக்கிறது; ஆட்சிக்கு எதிரான அலை மிகப்பெரிய அலையாக இருக்கிறது. இமாலய வெற்றியை நோக்கி NDA நகர்ந்து கொண்டிருக்கிறது. திருமாவளவன்: எடப்பாடி பழனிசாமி அவர்களே, பாஜக உடன் கூட்டணி அமைத்ததற்கு ஒரே ஒரு நியாயமான காரணத்தை உங்களால் சொல்ல முடியுமா? 21ஆம் தேதி வரை தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இருக்கிறது; அதற்குள் ஒரே ஒரு முறையாவது அந்த காரணத்தை விளக்கிச் சொல்லுங்கள் பார்ப்போம். “நன்றி செய்திகதிர்” Post navigation பாரதிய.ஜனதாவுடன் இருக்கும் வரை வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்க முடியும்.தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு கமிஷன், கலெக்சன், கரப்ஷன்: திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு