நெய்வேலி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நெய்வேலி தர்மன் காவல் நிலைய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் நெய்வேலி நீதிமன்றத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் மூத்த வழக்கறிஞர் இளங்கோவன் இவர் கடந்த பத்தாண்டுக்கு முன்பு தந்தை மகள் ஜீவனாம்சம் சம்பந்தமான வழக்கை நீதிமன்றத்தில் வாதாடி வந்து வெற்றியும் பெற்றார்.அந்த வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாத எதிர் தரப்பு வழக்கறிஞர் மாரிமுத்து என்பவர் வழக்கறிஞர் இளங்கோவன் காரில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வழக்கின் தீர்ப்பு வந்ததும் வெளியே வரும்போது மாரிமுத்து என்பவர் இளங்கோவனை சரமாரி தாக்கியதோடு பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். அப்போது அங்கிருந்த சக வழக்கறிஞர்கள் தாக்குதலுக்குள்ளான இளங்கோவனை பத்திரமாக மீட்டனர் இது சம்பந்தமாக நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இளங்கோவன் புகார் அளித்த நிலையில்புகாரைப் பெற்றுக் கொண்ட நெய்வேலி காவல்துறை மாரிமுத்துவை நேரில் இதுவரை விசாரிக்காமல் கால தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறதுபுகார் மீது நடவடிக்கை எடுக்காத நெய்வேலி காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர் இளங்கோவனுக்கு ஆதரவாக நெய்வேலி நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நெய்வேலி நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கூறுகையில் இன்று மாலைக்குள் புகார் அளித்த மாரிமுத்துவின் மீது வழக்கு பதிவு செய்யாமல் காலதாமதம் செய்தால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை தெர்மல் காவல் நிலையத்தில் முன்பு நடத்துவோம் என தெரிவித்தனர். D.தனுஷ்குறிஞ்சிப்பாடி17.07.26 Post navigation வடலூர் அருகே அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா,