whatsapp image 2026 07 17 at 9.07.45 am

வடலூர், ஜூலை.17-
வடலூர் அருகே உள்ள கருங்குழிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா,கல்வி வளர்ச்சி நாள் விழாவாக குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி தலைமையில்நடைபெற்றது.
பள்ளி தலைமைஆசிரியர் அந்தோணிஜோசப் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டி. ஆர். எம் சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் டி ராஜமாரியப்பன் கலந்துக்கொண்டு. பள்ளிக்கு பிரிண்டர் மற்றும்
பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில்
கலந்துகொண்டமாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார். விழாவையொட்டிமாணவர்ககளின் கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றன. இதில்
ஆசிரியர்களான சாந்தி ,மேரி புஷ்பலதா, ஆரோக்கியதாஸ்,
லயோனா ,கீதாமஞ்ஜித் மற்றும்எஸ் எம் சி
உறுப்பினர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கியதை தொடர்ந்து விழா இனிதே நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *