பாஜகவை ஆதரித்து நேரில் பிரசாரம் செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்றியது ஒருதலைபட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கை. நியாயமான – சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம், கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது. – முதல்வர் மு.க.ஸ்டாலின் Post navigation “பிராமணர்கள் ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK – 35 ஆண்டுகளில் முதல்முறை “