whatsapp image 2026 04 13 at 10.48.23 pm

கடலூர் பிரச்சாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டிற்கு வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தெலங்கானாவிற்கு சென்றுவிட்டன. காரணம் கமிஷன், கலெக்சன், கரப்ஷன். வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டுமானால் ஒரு ஏக்கருக்கு 40 லட்சம் ரூபாய் கேட்கப்படுகிறது. அதில் 20 லட்சம் ரூபாய் கருப்பு பணமாக கேட்கப்படுகிறது. இதற்கு பயந்து வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் முதலீடு செய்ய பயப்படுகிறார்கள்.

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு நன்மை செய்வதை விடுத்து, விவசாயிகளை மிரட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம் பிடுங்கி கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கிராமத்தை அப்புறப்படுத்த காவல் துறையை அனுப்பி மிரட்டுகிறார்.

அதிமுக ஆட்சியில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3500, ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *