images

“திமுகவின் தேர்தல் அறிக்கையே தான் ஹீரோ என்று மு.க. ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அது ஹீரோ இல்லை, ஜீரோ. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு பற்றிப் எதுவும் இல்லை.
போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான எந்த வாக்குறுதியும் திமுக அளிக்கவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையை குப்பையில் தான் தூக்கி போட வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 8000 ரூபாய் கூப்பன் கொடுப்போம் என்று. தமிழ்நாட்டில் 2 கோடி குடும்பங்கள் இருக்கின்றன.
திமுக வெற்றி பெற்றால் 10 லட்சம் பேருக்கு மட்டும் தான் கூப்பன் கொடுக்கும். அந்த கூப்பனை வாங்க, திமுக காரருக்கு 3 ஆயிரம் ரூபாய் நாம் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
ஆனால் அதிமுக வெற்றி பெற்றால், இபிஎஸ் 10,000 ரூபாய் பணமாக கையில் கொடுப்பார். அது மட்டுமில்லாமல் ஒரு ஃப்ரிட்ஜும் கொடுக்க இருக்கிறார்.

“தூக்கத்திலும் புலம்புகிறார் “

ஸ்டாலின் வார்த்தைக்கு வார்த்தை பாஜக… பாஜக… பாஜக… என்கிறார். ஏன் பாஜகவை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார்? தூக்கத்திலும் கூட பாஜக, பாஜக என ஸ்டாலின் புலம்பி கொண்டு இருக்கிறாராம்.
யாராவது தும்மினாலும் கூட அதற்கு காரணம் பாஜகதான் என ஸ்டாலின் சொல்வார். எங்கள் கூட்டணியில் மத்திய பாஜக அரசு இருப்பதால், தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதலமைச்சராக இபிஎஸ் பெற்றுக் கொடுப்பார்.
அமைச்சர்கள் எ.வ. வேலு, சேகர்பாபு, கே.என். நேரு, செந்தில் பாலாஜி போன்றோர் எல்லாம் பணத்தை கொள்ளையடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மோசடி கும்பலை நான் விரட்டி அடிக்க வேண்டும்.
ஒரு ஊருக்குள் திருடன் வந்தால், எப்படி அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து விரட்டி அடிப்போமோ, அதுபோல அனைவரும் சேர்ந்து இந்த திமுக கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.”

– ராணிப்பேட்டை பிரச்சாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed