சென்னையில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 லட்சம் கிலோ கஞ்சா விற்பனை நடைபெற்றுள்ளது; திமுக தேர்தல் அறிக்கையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து குறிப்பிடப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மாநிலத்தின் கடன் அதிகரித்துள்ளது; கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது; சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் 25% தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன; வேலைவாய்ப்பு குறைபாடு நிலவுகிறது. அரசு 5.5 லட்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி 94,000 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது. மணல் குவாரிகளில் வருவாய் குறைவாக காட்டப்பட்டுள்ளது; பொருளாதார முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது. Post navigation புதுச்சேரி,யூனியன் பிரதேசத்திற்கு தவெக அளித்த வாக்குறுதிகள் “ புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன்,