, விழுப்புரம் மாவட்டம்திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சின்னமயிலம் என்கிகிற இரட்டை குன்று ரத்தினவேல்முருகன் (எ)பாலசுப்பிரமணியர் கோவில் திருவிழாவில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.45ஆயிரத்து500க்கும் -9எலுமிச்சை பழம் 1லட்சத்து 43ஆயிரத்துக்கு ஏலம் விட்ட அதிசய நிகழ்வு நடைபெற்றது. எலுமிச்சை பழத்தை குழந்தையில்லாத தம்பதியினர் மற்றும் கல்யாணமாகதவர்கள் தொழில் முன்னேற்றமடைய வியாபாரிகள் வாங்கி சென்றனர்.திருவெண்ணெய்நல்லூர், ஏப்.3-விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில்மிகவும் பழமையான பிரசித்திபெற்ற ரத்தினவேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் பங்குனி உத்திர திருவிழாவும் எலும்பிச்சை பழம் ஏலமும் பழங்காலந்தொட்டு நடைபெற்று வருகிறது. மொத்தம் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 23ந்தேதி முதல்நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1 முதல் 6ம் திருவிழா வரை ஒவ்வொரு உபயதாரர்கள் மூலம் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள், சாமி விதியுலா நடைபெற்றது. 29ந்தேதி 7ம் நாள் திருவிழாவில் முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம், 30ந்தேதி 8ம் நாள் திருவிழாவில் கரகதிருவிழாவும், 31ந்தேதி 9ம் திருவிழாவில் தேர்விதியுலா நடைபெற்றது. 1ந்தேதி 10ம் திருவிழாவில் பங்குனி உத்திரதிருவிழாவும், காவடி ஊர்வலமும் நடைபெற்றது. இதில் முதல் ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் திருவிழவின்போது இரட்டை குன்றின் மீது அமைந்துள்ள முருகன் அருகில் அமைந்தள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலும்பிச்சை பழம் விதம் ஒன்பது நாள் சொருகுவார்கள். அந்த பழத்தை பத்திரமாக எடுத்துவைத்து கொள்வார்கள். (2ந்தேதி) 11ம் நாள் நேற்று இரவு 11மணிமுதல் 1மணிவரை நடைபெற்றஇடும்பன் பூஜைதிருவிழாவில், இடும்பன் சாமிக்கு கருவாடு சோறு படையல் வைத்து சிறப்பு பூஜைகள் அபிஷேகம் செய்து ஊர் பொது மக்கள் முன்னிலையில் ஒன்பது நாள் எலும்பிச்சை பழத்தையும் மரசெருப்பின் மீது நின்று நாட்டாமை புருஷோத்தமன் ஏலம் விட்டார்.முதல்பழத்தைஒட்டனந்தல் பவித்ரா- வெங்கடேசன் தம்பதியர் 45, 500 ரூபாய்க்கு ஏலம் ஏலம் எடுத்தனர்.இரண்டாம் நாள் பழத்தை பெரிய செவலை கோபால்-பாக்கியம் தம்பதியர் 15000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.மூன்றாம் நாள் பழத்தை பண்ருட்டி சரவணன் -வித்யா தம்பதியர் 16,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.நான்காம் நாள் படத்தை ஒட்டனந்தல் சுந்தர்ராஜ் -ஜீவா தம்பதியர் 14,500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.ஐந்தாம் நாள் ஒட்டனந்தல் பழத்தை பரந்தாமன்- லட்சுமி தம்பதியர் 16,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.ஆறாம் நாள் பழத்தை இருவேல் பட்டு பிரகாஷ்- பழனியம்மாள் தம்பதியர் 16,500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.ஏழாம் நாள் பழத்தை தென்மங்கலம் சிவா- விணுப்ரியா தம்பதியர் 9000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.எட்டாம் நாள் பழத்தை பூசாரி பாளையம் கலா 5 ஆயிரம் ரூபாய்க்கும்,ஒன்பதாம் நாள் பழத்தை கோட்லாம்பாக்கம் வெங்கடேசன் 5500 ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர்.ஒன்பது நாள் பழங்களும் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதனை ஏலம் எடுப்பதற்கு சென்னை, பெங்களூர், புதுச்சேரி, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்தும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் எரராளமான குழந்தையில்லாத தம்பதியினர், வியாபாரம் செய்பவர்கள், வீடுகட்ட முயல்பவர்கள், கல்யாணமாகதவர்கள், தொழில்செய்ய முனைவர்கள் என பலர் தங்கள் குறைகள் தீரும் என்ற நம்பிக்கையில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். ஏலம் உள்ளுர்காரர் துணையுடன் ஏலம் எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளதால்ஏலம் எடுப்பவர்கள் ஈரத்துணியடன் பயபக்கியுடன் ஏலம் எடுத்தனர். ஏலம் எடுப்பவர்களுக்கு எலும்பிச்சை பழத்துடன் ஒரு உருண்டை கருவாடு சாதம் வழங்கப்பட்டது. எலும்மிச்சை எடுத்து பயன் பெற்றவர்கள் அடுத்த வருடம் வந்து நன்றி கடன் செலுத்துகின்றனர், தகவல் உதவி செய்தியாளர்,கோ. சுரேஷ் Post navigation மந்தாரக்குப்பத்தில் பங்குனி உத்திர காவடி உற்சவம், ஆயிரம் பேருக்குஅன்னதானம்