whatsapp image 2026 04 08 at 7.44.21 pm

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர் பேரணி

வடலூர், ஏப்.9:
வடலூர் நகராட்சியில் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி
கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து
துவக்கி வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் ஹேமலதா,தேர்தல் துணை அலுவலர்கள் விஜய் ஆனந்த்,ஆனந்தி முன்னிலை வகித்தனர். குறிஞ்சிப்பாடி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணி வடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி
நான்கு முனை சந்திப்பு சாலை, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பேரணியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் மேற்கொள்ளும் விதமாக தேர்தல் நாளான ஏப்ரல் 23-ம் தேதி வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களித்து மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கினை எட்ட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். பின்னர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில்
தேர்தல் துணை வட்டாட்சியர் தனலட்சுமி, நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், மேலாளர் துரை, இளநிலை உதவியாளர் கணேசமூர்த்தி,கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed