palaniswami edappadi k pti 1200x768

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை கவலைக்கிடமாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவது, பளுதூக்கி உடற்பயிற்சி செய்வது என்று வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். அரசு செலவில் வெளிநாட்டுக்கு சைக்கிள் ஓட்டவா செல்ல வேண்டும்.

தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார். ஒரு தொழிற்சாலையை உருவாக்க வேண்டுமென்றால் 4 ஆண்டுகள் தேவைப்படும். அது தெரிந்தும் ஸ்டாலின் பொய் கூறி வருகிறார்.

தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள், ஏன்? மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை. உரிய பாதுகாப்பு கொடுக்க முடியாத ஆட்சி தொடர வேண்டுமா? குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஸ்டாலின் சிந்திக்கிறாரா? தமிழ்நாட்டில் கிராமங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் முழுவதும் ஒழிக்கப்படும். சட்டத்தின் ஆட்சி நடக்கும். அப்படிப்பட்ட ஆட்சி அமைய அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

வீட்டு வரி விகிதம் 100% உயர்த்தியுள்ளது திமுக அரசு. மின் கட்டணம் உயர்ந்துள்ளது. மின் கட்டண உயர்வைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது.
இவ்வாறு
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed