whatsapp image 2026 04 07 at 2.35.52 pm (1)

திருச்சி புத்தூர் பகுதியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அரங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா உள்ளிட்டோர் குடும்பம் சகிதமாக தனது இல்லத்தின் முன்பு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகத்தை நடத்தி வருகின்றனர்.
புத்தகம் மட்டும் இன்றி இதழ்களையும்‌ சேகரித்து வருகிறார். நூலகத்திற்கு நந்தவனம் பவுண்டேஷன் நந்தவனம் சந்திரசேகரன் வாசித்த சமகால பருவ இதழ்களை நூலகத்திற்கு வழங்கி பேசுகையில்,செய்திகளைச் சேகரிப்பதும், சேகரித்த செய்திகளைச் செம்மையாக்கி நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் வழியாக செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் பிற இலக்கிய வகைகளாகவும் வெளிவருவதை இதழ்கள் என்கிறோம். இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் வகைப்படுத்தி வரையறுக்கலாம். நாள்தோறும் காலையில் வெளியாகும் இதழ்களை காலை நாளிதழ்கள் என்றும் மாலையில் வெளியாகும் நாளிதழை மாலை நாளிதழ் எனலாம்.இதழ்கள் பல்வேறு நோக்கம், குறிக்கோள் அடிப்படைகளில் வகைப்படுத்தப் படுகின்றன. இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலும், இடம்பெறும் செய்திகள் மற்றும் யாருக்காக வெளியிடப்படுகின்றன என்ற அடிப்படையிலும், தர அடிப்படையிலும் வகைப்படுத்தப் படுகின்றன. இதழ்களின் உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபடுத்தி வகைகளாக்கப்படுகின்றன.இதழ்கள் வெளியாகும் காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் வெளியானால் நாளிதழ் என்றும், வாரந்தோறும் வெளியானால் வார இதழ் என்றும், மாதந்தோறும் வெளியானால் மாத இதழ் என்றும், காலாண்டு தோறும் வெளியானால் காலாண்டிதழ் என்றும், ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ் என்றும் அழைக்கப்படுகின்றன.
துறை சார்ந்த ஆராய்ச்சி இதழ்கள் , உள்ளடக்க அடிப்படை இதழ்களில் இடம் பெறும் செய்திகள் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் இதழ்களை வரையறைப்படுத்தலாம். அதாவது வெளியிடப்படும் செய்திகள் மற்றும் படைப்புகள் எதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்ற அடிப்படையில் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான பகுப்பு வருங்கால சமுதாயத்திற்கு பயன்படும் அவ்வகையில் தனது இல்லத்திலேயே நூலகத்தை நடத்தி வரும் குடும்பத்தின் பணி பாராட்டக்கூடியது அதில் இதழ்கள் சேகரிப்பும் முக்கியமானவை ஆகும் என்றார். இலவச நூலகம் நடத்தி வரும் அமிர்தம் சமூக சேவ அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்
அரிய, அல்லது பழமையான புத்தகங்களைத் தேடிப் பிடித்து, அவற்றை ஒழுங்கமைத்து,இல்லத்திலேயே இலவச நூலகம் அமைத்துள்ளோம்.
ஆசிரியர், பொருள், அல்லது காலம் அடிப்படையில் புத்தகங்களை வகைப்படுத்தி, அட்டவணைப்படுத்தி
நூலகத்தை அமைத்துள்ளோம்.வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதுடன், வரலாற்று ஆவணங்களைச் சேமித்து வருகிறோம். மேலும் பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம், உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதங்னை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *