rajni tamil

சென்னை: நடிகர்கள் பின்னால் சென்று காயமடைந்தால் அது உங்களுக்குதான் ஆபத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விஜய் பிரச்சார பயணத்தில் தொடர்ந்து விபத்து நடைபெறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று நெல்லை பிரச்சாரத்துக்காக தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற விஜய் அங்கிருந்து வேனில் நெல்லை பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடியில் இருந்து வேனில் சென்ற விஜயை ஏராளமான தவெகவினர் பின்தொடர்ந்து செல்கின்றனர். விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

விமான நிலையத்தில் இருந்து சிறிதுதூரம் சென்றவுடன் நடந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அதில் இருந்து 7 இளைஞர்கள் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். விபத்து நடந்தபோதும் விஜய் வாகனம் தொடர்ந்து நெல்லை நோக்கி சென்றது. விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து ஓடி வந்த ரசிகர்களும் கீழே விழுந்து காயமடைந்தனர். விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து ஓடி வந்த ரசிகர்களை பவுன்சர் தள்ளிவிட்டதால் கீழே விழுந்தனர். விஜயிடம் புகைப்படத்தை கொடுக்க ஓடிவந்தபோது பவுன்சர், ரசிகர்களை தள்ளிவிட்டார். விஜய் பிரச்சார பயணத்தில் விதிமீறல்கள் தொடர்வதால் விபத்து ஏற்படுகிறது.

ஏற்கனவே அண்மையில் திருச்சிக்கு பிரச்சாரம் சென்றபோதும் விஜயை பின் தொடர்ந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது; நடிகர்கள் பின்னால் சென்று காயமடைந்தால் அது உங்களுக்குதான் ஆபத்து. நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார். படிக்கும் வயதில் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *