கடலூர்கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும்,குறிஞ்சிப்பாடி திமுக எம்ஆர் கே பன்னீர்செல்வம்,திட்டக்குடி திமுக சிவிகணேசன்,கடலூர்காங்கிரஸ் சந்திரசேகரன்,பண்ருட்டி விசிக,அப்துல் ரகுமான்,நெய்வேலி திமுகசபா ராஜேந்திரன், புவனகிரி துறை கி சரவணன், விருத்தாசலம் தேமுதிகபிரேமலதா, காட்டு மன்னார் கோயில், ஜோதிமணி, மனித நேய மக்கள் கட்சி, தமிமுன் அன்சாரிமற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த 9 வேட்பாளர்களை, ஆதரித்து நேற்றிரவு ( 07.04.2026) முதல்வர் ஸ்டாலின் பேசினார்.அவர் பேசுகையில், “திராவிட மாடல் ஆட்சியின் ஒவ்வொரு திட்டமும் ஹிட் அடித்து, தமிழ்கம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது.செயின்ட் ஜார்ஜ் கோட்டை யில் இருந்து, ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சிக்காக டேவிட் கோட்டை உள்ள கடலூருக்கு வந்திருக்கிறேன். பழனிசாமி படு பாதாளத்துக்கு தள்ளிய தமிழ்நாட்டை சரி செய்திருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டங்களால் 11.9 சதவீத பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ‘நம்பர் ஒன் ஸ்டேட்’ என்று கொண்டு வந்துள்ளோம். அடுத்த 2.0க்கு ரெடி ஆகலாமா? நான் ரெடி நீங்க ரெடியா? சாதனை திட்டங்களை நிறைவேற்ற தெம்போட திராணியோட உரிமையோட உங்ககிட்ட நான் வந்து இருக்கிறேன்.கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 100-க்கு 100 சதம் அடிப்போம். மகளிர் மேம்பாட்டுக்கு முதல் நாள் முதல் கையெழுத்திலேயே விடியல் பயணத் திட்டத்தை சாத்தியப்படுத்தியவன் தான் இந்த ஸ்டாலின்.மகளிர் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகக் கொண்ட விடியல் பயணத் திட்டத்தை பிரதமர் வரவேற்று இருக்க வேண்டும். ஆனால் அவர், ‘நகரத்தில் இலவசமாக பேருந்தில் செல்வதால் மெட்ரோ ரயில் திட்டம் நஷ்டத்தில் இயங்குகிறது’ என்றார். அவருக்கு இந்த திட்டம் பிடிக்கவில்லை. மகளிர் முன்னேற்றத்தை பற்றி அவருக்கு கவலை இல்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை நிறுத்தி விடுவார்கள். ஸ்டாலின் இருக்கும் வரை இந்த திட்டத்தை நிறுத்த முடியாது.என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டை சீரழிக்க நிறைய திட்டங்களை வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள் அதற்கான ட்ரெய்லர்தான் ‘உதய் மின் திட்டம்’. தமிழை அழிப்பதற்கான திட்டம்தான் மும்மொழி கொள்கை திட்டம். தொகுதி மறு சீரமைப்பு, ஜிஎஸ்டி இப்படி வரிசையாக என்டிஏ கூட்டணி நிறைய பிளான் வைத்துள்ளது. இதனை முறியடிக்க நம்மால் மட்டும் தான் முடியும். பழனிசாமி ஆட்சியில், ‘கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன்’ மட்டும்தான் இருந்தது. தமிழ்நாடு போதை பொருள் மயமானது உங்கள் தை நிறுத்தி ஆட்சியில் தான்.சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம், பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்பாட்டு பணிகள், கடலூர் கெடிலம் ஆற்றில் புதிய பாலம், சிதம்பரம் கூட்டு குடிநீர் திட்டம், அருவா மூக்கு திட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பெருமாள் ஏரியை தூர்வாரி மேம்படுத்தும் திட்டம், திட்டக்குடியில் கால்நடைதிட்டங்களை சொல்லிக் தீவன ஆலை என சாதனை சொல்லிக் கொண்டே போகலாம்,அவர்களுடையச் சாதனை, தரம் தாழ்ந்து கொச்சைப்படுத்தி பேசுவது மட்டுமே. பழனிசாமி மகளிர் உரிமைப் பேருந்தை ‘லிப்ஸ்டிக்’ பேருந்து என்றார். பெண்களை இழிவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் சங்கி கூட்டமாக அதிமுக மாறியுள்ளது. இது அண்ணா திமுக அல்ல அமித்ஷா திமுகவாக வாக மறியுள்ளது. Post navigation OnlineEasyPay arrives on the online shopping platform ShopOnline.com