whatsapp image 2026 03 30 at 10.30.41 pmதேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

வடலூர், ஏப்.1தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் காணும் திமுக தலைமையிலான மத சசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, நாதக, தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கவிதா ரங்கநாதன் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.இதனை தொடர்ந்து பாச்சாரப்பாளையம் கீழர் பகுதியை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் கொளஞ்சி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *