whatsapp image 2026 04 03 at 11.51.21 am

கடலூர்,மாவட்டச்செயலாளர் – அமைச்சர் எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வம்,வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் முக ஸ்டாலின் வருகின்ற (07.04.2026 செவ் வாய்க்கிழமை) காலை 08.00 மணியளவில், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், கடலூர், திட்டக்குடி, விருதாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தும், ஆதரித்தும் நடைபெறும், சட்ட மன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ளார்.
அதுசமயம் இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்டக்கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் கிளை, வார்டு கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும்நிர்வாகிகள்,முன்னாள்,
இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள், மாவட்டக் கழக தொகுதி பார்வையாளர்கள், முன் னாள், இந்நாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாநகர மேயர், மண்டல குழு தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்கள், முன்னாள் மாவட்டக்குழு, ஒன்றியக்குழு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், வார்டு, பூத் கழக இளைஞரணி மற்றும் மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி. வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, தொண்டரணி, தொழிலாளர் அணி, மீனவரணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் தொழிலாளர் முன்னேற்றச்சங்கம் ஆகிய அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் (BLA2), பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLC), பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள்(BDA), ஸ்டாலினின் மகளிர் படையினர்கள், கழக தோழர்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செய்தியாளர் – ஜீவா செந்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *