வல்லம் சமயபுரம் மகா மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வல்லம் கிராமத்தில் சமயபுரம் ஸ்ரீ மகா மாரியம்மன் பாதயாத்திரை வைபவ திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அதன்படி காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வருகின்ற 16ம் தேதி மாலை 6 மணி அளவில் வல்லம் கன்னி மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் நோக்கி பாதயாத்திரை பொதுமக்கள் செல்ல உள்ளனர். சமயபுரம் ஆலயம் நோக்கி பாதயாத்திரை புறப்பட்டு ஏழாம் நாள் திங்கட்கிழமை யாத்திரைகள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து மேற்படி செவ்வாய்க்கிழமை காலை 5 மணி அளவில் சக்தி பூஜை நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் கோபம் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து தீச்சட்டி பூச்சட்டி கரகம் நேரில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கன்னி மாரியம்மன் கோவிலில் பாலாபிஷேகம் செய்து பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.