பேடிஎம் முடக்கத்திற்கு இதுவே காரணம்; விரிவான தகவல்!
பிப். 29க்குப் பிறகு வாடிக் கையாளர்களிடம் டெபாசிட் பெறுவது அல்லது கணக்கில் டாப்-அப் தொகையை செலுத்துவது, இ-வாலட், ஃபாஸ்ட் டேக் ஆகியவற்றுக்கான நிதி நடவடிக்கைகளில் பேடிஎம் ஈடுபட முடியாது. இருப்பினும் இப்போது பேடிஎம்-ல் உள்ள வாடிக்கை யாளர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனையை செய்ய முடியும். இந்த சேவையை வேறு நிறுவனங்களின் உதவி யுடன் பேடிஎம் வழங்கும். இந்த நடவடிக்கை குறித்து கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ரிசர்வ் வங்கி அறிவு றுத்திய எந்த நடவடிக்கையையும் பேடிஎம் மேற்கொள்ளவில்லை. ஆகவேதான் இந்த கடும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுக்க நேரிட்டது. யுபிஐ பணப்பரிவர்த்தனை அமைப்புமுறையில் எந்த சிக்கலும் இல்லை. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணக்கமில்லா செயல்தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்றார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுவாமிநாதன் கூறுகையில், இந்த விவகாரத்தில் நுட்பமான தகவல்களை வெளியிட்டு, நடவடிக்கை எடுக்கப் பட்ட காரணங்களை விளக்க விரும்பவில்லை. இது ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. பல மாதங்களாக தொடர்ந்து ரிசர்வ் வங்கி மற்றும் தணிக்கைத் துறை வலியுறுத்தியும், பேடிஎம் தனது தவறை திருத்திக்கொள்ளவில்லை. ஆகவேதான் இந்த நடவடிக்கை என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். பல கணக்குகளுக்கு ஒரே பான் நம்பர் கொடுக்கப்பட்டுள் ளது. சில கணக்குகளுக்கு ஒரு பான் நம்பரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங் கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பல நுாறு கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடைபெற்றது. இவை சட்டவிரோதமானது. ஒரு வாடிக்கையாளர் வங்கிக் கணக்கு தொடங்கும்போது, அவர்கள் குறித்து விவரங்களை சரிபார்க்க, நோ யுவர் கஸ்டமர் என்ற நடவடிக்கையை ரிசர்வர் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. இதனடிப்படையில், பான், ஆதார் உள்ளிட்ட வேறு அடை யாளங்களைப் பெற்று சரிபார்க்க வேண்டும். ஆனால் பேடிஎம் இதுநாள் வரை, பல முறை அறிவுறுத்தி யும் சரிபார்க்கவில்லை. பேடிஎம் பேமென்ட்பாங்கில் இ-வாலட் கணக்கில் தொடங்கியவர்கள் 35 கோடி பேர். ஆனால் இதில் 31 கோடி இ-வாலட் கணக்குகள் எந்த செயல்பாடும் இல்லாமல் இருக் கிறது. 4 கோடி இ-வாலட் கணக்குகள் மட்டுமே தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளன. ஆனால் இவை, நோ யுவர் கஸ் டமர் நடைமுறைப்படி, சரிபார்க் கப்படவே இல்லை பேடிஎம்,அதன் தாய்நிறுவனம் ஒன் 97 கம்யூனிகேசன் லிட் ஆகியவற்றுக்கு இடையே மறை முகமாக பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இது சட்டவிரோத பணப்ப ரிமாற்றத்துக்கு துணைபோகும் செயல். ஆகவே வேறு வழியில் லாமல், பேடிஎம் பணப்பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி நடவடிக்கையைத் தொடர்ந்து பங்குச்சந்தை யில் பேடிஎம் பங்குகள் 36 சதவீதம் குறைந்துள்ளது. 200 கோடி டாலர் அளவுக்கு மதிப்பு சரிந்துள்ளது. பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறுகையில், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை ஸ்பீட் பிரேக்கர் போன்றது என்று விமர்சித்துள்ளார். ஆனால் குற்றச் சாட்டுகளை மறுக்கவில்லை.