நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்; கருத்துக் கணிப்பில் தகவல்!
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆங்கில செய்தி சேனலான இந்தியா டுடே டி.வி.யும், சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நாடு முழுவதும் மூட் ஆப் தி நேஷன் என்ற தலைப்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பு கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் ஜனவரி 28-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் 35 ஆயிரத்து 801 பேரிடம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
39 தொகுதிகளையும் அள்ளும் தி.மு.க. கூட்டணி
அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி 47 சதவீத வாக்குகளுடன் 39 தொகுதிகளையும் கைப்பற்றும். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு 38 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு சாதகம்
அதே நேரம் தேசிய அளவில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பல்வேறு மாநிலங்களில் தேர்தல் முடிவு சாதகமாக இருக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
அதன்படி மாநில வாரியாக விவரங்கள் வருமாறு:-
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசம் (80 தொகுதிகள்):
பா.ஜனதா கூட்டணி – 70 இடங்கள்
இந்தியா கூட்டணி – 8
(சமாஜ்வாடி-7, காங்கிரஸ்-1)
மேற்குவங்காளம் (40 தொகுதிகள்):
திரிணாமுல் காங்கிரஸ் – 22
பா.ஜனதா கூட்டணி – 19
பீகார் (40 தொகுதிகள்):
பா.ஜனதா கூட்டணி – 32
இந்தியா கூட்டணி – 8
கர்நாடகம்
கர்நாடகம் (28 தொகுதிகள்):
பா.ஜனதா கூட்டணி – 24
இந்தியா கூட்டணி – 4
ஜார்கண்ட் (14 தொகுதிகள்):
பா.ஜனதா கூட்டணி – 12
இந்தியா கூட்டணி – 2
அசாம் (14 தொகுதிகள்)
பா.ஜனதா கூட்டணி – 12
இந்தியா கூட்டணி – 2
பஞ்சாப்
பஞ்சாப் (13 தொகுதிகள்):
ஆம் ஆத்மி – 5
காங்கிரஸ் – 5
பா.ஜனதா கூட்டணி – 2
அகாலிதளம் – 1
அரியானா (10 தொகுதிகள்):
பா.ஜனதா கூட்டணி – 8
இந்தியா கூட்டணி – 2
உத்தரகாண்ட் (5 தொகுதிகள்):
பா.ஜனதா கூட்டணி – 5
காஷ்மீர்
காஷ்மீர் (5 தொகுதிகள்)
இந்தியா கூட்டணி – 3
பா.ஜனதா கூட்டணி – 2
இமாச்சலபிரதேசம் (4 தொகுதிகள்):
பா.ஜனதா கூட்டணி – 4
ஆந்திரா-தெலுங்கானா
ஆந்திரா (25 தொகுதிகள்)
தெலுங்கு தேசம் – 17
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் -8
(இங்கு காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு எந்த தொகுதியும் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.)
தெலுங்கானா (17 தொகுதிகள்):
இந்தியா கூட்டணி – 10
பா.ஜனதா கூட்டணி – 3
பி.ஆர்.எஸ். கட்சி – 3
ஒவைசி கட்சி – 1
டெல்லி-மராட்டியம்
டெல்லி (7 தொகுதிகள்):
பா.ஜனதா கூட்டணி – 7
மராட்டியம் (48 தொகுதிகள்):
பா.ஜனதா கூட்டணி – 22
இந்தியா கூட்டணி – 26
(காங்கிரஸ் -12, உத்தவ் தாக்கரே, சரத்பவார் 14)
கேரளா-குஜராத்
கேரளா (20 தொகுதிகள்):
இந்தியா கூட்டணி – 20
(இதில் காங்கிரஸ், இடதுமுன்னணி கூட்டணி அடக்கம்)
குஜராத் (26 தொகுதிகள்):
பா.ஜனதா கூட்டணி – 26
மேற்கண்டவாறு அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மற்ெறாரு கருத்துக்கணிப்பு
இதேபோல் டைம்ஸ் நவ் மற்றும் மேட்ரிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய மற்றொரு கருத்துக்கணிப்பு முடிவும் வெளியாகியுள்ளது.
அந்த கருத்துக்கணிப்பிலும் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி தி.மு.க. கூட்டணி 36 தொகுதிகளிலும், அ.தி.மு.க. கூட்டணி 2 தொகுதிகளிலும், பா.ஜனதா கூட்டணி 1 தொகுதியிலும் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும், கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதாவுக்கும் சாதகமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களையும், பா.ஜனதா கூட்டணி 5 இடங்களையும், பி.ஆர்.எஸ். கட்சி 2 இடங்களையும், ஒவைசியின் கட்சி 1 இடத்தையும் பிடிக்கலாம் என்று தெரிவிக்கிறது. ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 19 இடங்களிலும், தெலுங்குதேசம் கட்சி 6 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கர்நாடகத்தை கைப்பற்றும் பா.ஜனதா
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ், இடது முன்னணி கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 24 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணியே கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.