சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்காக பனகல் பார்க் பகுதியில் வரும் 24ம் தேதி முதல் டிச.1ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயண சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. மாறாக. அவர்கள் நேராக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாகச் சென்று வெங்கடநாராயணசாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.
உள்ளூர் மக்களின் வசதிக்காக, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படும். தகவல்
“சென்னைபோக்குவரத்து காவல்துறை ”