வடலூர் தமிழ் சங்கத்தின் முப்பெரும் விழா.ராஜமாரியப்பன் விருதுகளை வழங்கினார்
வடலூர் தமிழ் சங்கத்தின் முப்பெரும் விழா.ராஜமாரியப்பன் விருதுகளை வழங்கினார்
கடலூர் மாவட்டம்,வடலூர்அருட்செல்வர்மகாலிங்கம் கலையரங்கத்தில் ‘வடலூர் தமிழ்ச்சங்கம் மற்றும் வள்ளலார் முத்தமிழ் பேரவை சார்பில் வள்ளலார் 200, தமிழ்சங்கவிருது வழங்கல், வள்ளலார் வாழ்வியல் நெறி, நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா ஓபிஆர் கல்லூரி தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமையிலும், செயலாளர் கிரிஜா, துணைத்தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, பொருளாளர் விசயநாதன், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது, தமிழ் சங்க நிறுவனர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார், நிகழ்ச்சியில் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டது, தொடர்ந்து, “வள்ளலார் வாழ்வியல் நெறி”நூலினை டாக்டர் செல்வராஜ் வெளியிட, டிஆர்எம் கல்வி ஆறக்கட்டளை நிறுவனர் டி.ராஜமாரியப்பன் நூலினை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கப்பட்டது, இதில்
கவியரங்கம், கருத்தரங்கம், நாட்டிய,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மெட்ரிக்பிரிவு கல்வி அலுவலர் கனகசபை, தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் அருள் சங்கு, சன்மார்க்க அறிஞர் குரு பக்கிரிசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்,