நெய்வேலி பி.எம்.எஸ் அலுவலகத்தில் இந்திய காண்ட்ராக்ட் மஸ்தூர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
- நெய்வேலி பி.எம்.எஸ் அலுவலகத்தில் இந்திய காண்ட்ராக்ட் மஸ்தூர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
அகில இந்திய பாரதிய மஸ்தூர் சங்கத்தின் இணைப்பு சங்கமான அகில இந்திய காண்ட்ராக்ட் மஸ்தூர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நெய்வேலி பிஎம்எஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு என்எல்சி காண்ட்ராக்ட் மஸ்தூர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.கூட்டத்தில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அகில இந்திய அளவில் உள்ள 20க்கும் மேற்பட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய பொருப்பாளர் வீரேந்திர குமார் அவர்கள், அகில இந்திய தலைவர் ராதாகிருஷ்ணன் , அகில இந்திய பொதுச்செயலாளர் சச்சின் மேங்லே மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு தமிழ் மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். அகில இந்திய தலைவர்கள் என்எல்சி இயக்குனர் அவர்களை சந்தித்து ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியுள்ளனர் அதில்
- சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐடிஐ, டிப்ளோமா, பி.இ முடித்த ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,
அனைத்து ஒப்பந்த மற்றும் இன்ட்கோசர்வ் தொழிலாளர்களுக்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான மருத்துவ வசதி வழங்க வேண்டும், பணிநிரந்தரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு வழங்க வேண்டும்,அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் வழங்கி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்,
விடுபட்ட அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் சொசைட்டிக்குள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
என்.எல்.சி கான்ட்ராக்ட் மஸ்தூர் சங்க தலைவர் அருள்முருகன் பொதுச்செயலாளர் விக்னேஸ்வரன்,பொருளாளர் பாபு பேட்ரோல் ஆகியோர் உடனிருந்தனர்