“புகை மாசு விழிப்புணர்வு பேரணி”
சென்னை(கி) மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கம் மற்றும் ஆலடி அருணா அறக்கட்டளை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட “புகை மாசு விழிப்புணர்வு பேரணி” நிகழ்வை இராயபுரம் தனலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் இருந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் புகையால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

