பொங்கல் பண்டிகையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…காவல்துறை எச்சரிக்கை!

பொங்கல் திருநாளை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோவில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 50,000 காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் பெங்களூரூ நகரங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட/மாநகர காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்படுகிறது என காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், பொங்கல் விழாக்கள் சிறப்பாக நடைபெற பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டுள்ளார்கள் என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *